Monday 15 December 2014

கலாபூசணம் விருது பெற்ற இலக்கியமணி கோவிலுர் தணிகாவிற்கு வாழ்த்துக்கள்.

(பழுவூரான்)
கலாபூசணம் விருது பெற்ற இலக்கியமணி கோவிலுர் தணிகாவிற்கு நண்பர்கள் அமைப்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.




.

கலைகளின் விளைநிலமாய் உள்ள கவிஞர் கோவிலுர் தணிகா அவர்கள் சிறுவயது முதல் கூத்து நாடகம் கவிதை வில்லுபாட்டு நடனம் தாளலய அனைத்துக் கலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இச்சூழலில் தனது அண்ணனான திரு.க.முருகமூர்த்தியுடன் விவசாய வேலன் கூத்தில் ஆடினார். பின்னர் 1973ம் ஆண்டு திருப்பழுகாமத்தில் திருமண வாழ்க்கையை தொர்ந்து பழுகாமம் பாஞ்சாலிக்கலைக்கழகம் இவருக்கு நிரந்தர கலைக்கழகமாகி விட்டது. இச்சூழலில் தான் இரா.அரசகேசர. பொன்.தங்கராசா - அதிபர். சி.முருகேசு – அதிபர் ஆகியோருடன் ஏற்பட்ட பழக்கத்தால் இவரது கலைப்பணி சிறப்பாக வளர்ந்தது. இங்கும் இவர் பல படைப்புகளைப்படைத்து நடித்தும் பழக்கியும் வந்துள்ளார். 

குறுமன்வெளியில் அருட்செல்வநாயகம் எழுதிய கீசகன் வதம் கலாபூசணம் இராஇஅரசகேசரி எழுதிய கும்பகர்ணன் வதம், பிள்ளைக்கறி, ஜராசந்தன் போர் முதலிய கூத்துக்களில் நடித்துள்ளார். இவ்வேளையிலேயே வந்ததே சூறாவளி, சீ வேண்டாம் சீதனம், முதலிய காசிய கூத்துக்களை எழுதி நடித்துள்ளார்.
தொடர்ந்து தணிகா அவர்கள் கர்ணன் போர், பிள்ளைக்கறி,  சத்தியவான் சாவித்திரி, பத்மாசூரன் வதம், கும்பகர்ணன் வதம், கீசகன் வதம், பாஞ்சாலி சபதம் , இராமதூதுவன்  முதலிய புராணக் கூத்துக்களையும் பாரிவள்ளல் எனும் இலக்கிய கூத்தையும் எழுதி நடிக்கச் செய்துள்ளார்.
கோவிலூர் கிராமிய பாடல்கள் எனும் புத்தகத்தை 2013ம் ஆண்டு வெளியிட்டுள்ளார். இவர் மரபுக் கவிஞன், கவிக்குயில், கலைச்சுடர், இலக்கியமணி பொன்ற விருதுகளைப்பெற்றுள்ளார்.
இவருக்கு 2014ம் ஆண்டிற்கான இலங்கை அரசின் கலாபூசணம் விருது கூத்துக்கலைக்கான பணிசார்ந்து கலைப்பணிக்கே இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தணிகாசலம் அவர்கள் கலை – இலக்கிய பணி ஆற்றி பல விருதுகளைப்பெற வேண்டும். இவருக்கான விருதுகள் அனைத்தும் பாஞ்சாலி கலைக்கழதக்கிற்கு பெருமை சேர்ப்பன. இப்படைப்பாளி எப்போதும் கலைச்சூரியனாய் சுடர்விட வேண்டும். என்று மனமார வாழ்த்துகின்றோம்.